Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

புதனின் வக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள்...

A
Admin User
Journalist
September 10, 2022 9 min read 122 views
புதனின் வக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள்...

நவகிரகங்களில், புதன் கிரகமானது புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, கணிதம், புத்து கூர்மை மற்றும் நட்பு ஆகியவற்றிற்கான கிரகமாக கூறப்படுகிறது. அதிலும், 9 கிரகங்களில் புதன், இளவரசர் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் சுப நிலையில் இருக்கும்போது, ​​ஒருவருக்கு சுப பலன்களையும், அதுவே அசுப நிலையில் இருக்கும்போது, ​​பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசிக்கு புதன் வக்கிர பெயர்ச்சி ஆகிறார். ஜோதிடத்தில் கோள்களின் வக்கிர பெயர்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னி ராசியில் புதன் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்க போகிறது. ஆனால், சிலர் இந்த காலக்கட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதனின் வக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளின் நிலை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மனதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அலுவலகத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

பகல் நேரத்தில் தூங்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். உங்களுக்கு அந்த பழக்கம் இருக்கா?

ரிஷபம்

உங்களின் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகள் போன்ற அறிவுசார் வேலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

உங்கள் மனதில் இந்த நேரத்த்தில் சில எதிர்மறை எண்ணம் தோன்ற. அதுதவிர, சோம்பல் திடீரென அதிகமாக இருக்கும். நிதானமாக செயல்பட்டால் வியாபாரிகளுக்கு வியாபாரம் அதிகரிக்கும். இல்லையெனில், சில சிரமங்களும் இருக்கலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

கடகம்

தன்னம்பிக்கை அதிகமாக இருக்கக்கூடிய காலமிது. இருப்பினும், நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் பணி சுமையால் நீண்ட நேரம் உழைக்க வேண்டியிருக்கும். வணிகர்களுக்கு வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணத்திற்கான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்

உங்கள் மனதில் திடீர் குழப்பங்கள் தோன்றலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். பிறருடன் பேசும்போது சமநிலையைப் பேணுங்கள். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இக்கட்டான சூழலில் நண்பரின் ஆதரவையும் பெறலாம்.

முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க…

கன்னி

தேவையற்ற காரணங்கள் மனம் கலங்கும். உங்களின் தன்னம்பிக்கையும் குறையக்கூடும். இந்த நேரத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இதனால் முன்னேற்றப் பாதை காணப்படும். அலுவலகத்தில் வேலை செய்யும் நேரமும் அதிகரிக்கும். இருப்பினும், உழைப்பிற்கேற்ற வருமானம் அதிகரிக்கும். புது வாகன யோகம் கிடைக்கும்.

துலாம்

உங்களின் மன அமைதி நிலைத்திருக்கும். ஆனாலும், தன்னம்பிக்கை குறையக்கூடம். பிறருடன் பேசும் போது எப்போதும் சமநிலையுடன் இருங்கள். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு மேம்படும். வணிகர்கள், தங்கள் வியாபார விரிவாக்கத்திற்காக தந்தையிடமிருந்து நிதி உதவியைப் பெறலாம்.

விருச்சிகம்

இந்த நேரத்தில் உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை அதிகரிக்கும். தேர்வு, நேர்காணல் போன்றவற்றில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வெறும் வயிற்றில் இந்த இலையோட ஜூஸ் குடிச்சீங்கனா சிறுநீரக பிரச்சனை வரவே வராதாம்…

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் வக்கிர பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆனால், மனதில் அதிக அலைச்சல் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல திட்டம் அமையும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

புதனின் வக்கிர பெயர்ச்சியால் உங்களுக்கு தன்னம்பிக்கை முழுமையாக இருக்கும். ஆனால், மனதளவில் தொந்தரவும் ஏற்படலாம். நிதானமாக இருப்பதோடு, உங்களின் கோபத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் பேச்சின் தாக்கம் வேலையைப் பாதிக்கும். வணிர்களுக்கு வியாபாரம் பெருகும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். லாபத்திற்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் மனதில் வீண் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த நேரத்தில் நிதானமாக இருந்து, தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டியே நேரமிது. மாணவர்கள் கல்விப் பணி மேம்படும். உயர் கல்விக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புள்ளது.

மீனம்

இந்த நேரத்தில் தன்னம்பிக்கை குறைவு மற்றும் விரக்தி உணர்வுகள் மனதில் தோன்றலாம். வணிர்களுக்கு வியாபாரம் மேம்படும். ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்ட பணம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். வாகனப் பராமரிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் இந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுவது நல்லதாம்…

பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு!!!

இந்த கோடை விடுமுறைக்கு கம்மி செலவுல இந்த இடங்களுக்கு தாராளமா போகலாம்…

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க